கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து திகில் மற்றும் த்ரில்லர் படமாக "அக்டோபர்-31" என்ற திரைப்படம் எடுக்க முடிவு செய்து, படத்தின் தலைப்பை அக்டோபர் 31-ம் தேதியான இன்று வெளியிட்டு படப்பிடிப்பை துவக்கியுள்ளனர்.

இந்த திட்டத்தில் கோவையைச் சேர்ந்த இளைஞர்களே நடிகர்கள், இணை நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், எடிட்டிங், காமிரா, வரைகலை, கலை இயக்கம், சண்டைக் காட்சிகள், உடைகள், ஒப்பனை மற்றும் படம் எடுக்கப்பட்ட பின் உள்ள பணிகள் அனைத்தையும் மேற்கொள்கின்றனர்.
படத்தில் உள்ள அனைத்து தயாரிப்புகள், இயக்கம் உதவிகளை கோவை, கிளஸ்டர்ஸ் மீடியா அன்ட் டெக்னாலஜி இன்ஸ்டியூட் மற்றும் டீம் ஏ வென்ஞ்சர் செய்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் விவாகி, தயாரிப்பாளர் அமுதவானன். திரைப்படம் குறித்து இயக்குனர் விவாகி கூறுகையில், "இந்த படம் திரையுலகில், தொழில்நுட்பத்திலும், புதுமையான யோசனைகளிலும் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். திரைக்கு வரும்போது, மேலும் இது சிறப்பானதாக இருக்கும்." என்றார்.